குரு

வாழ்வாங்கு வாழ்க, வாழும் வகையறிந்து வாழ்க.

ஓம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டரே போற்றி !!!

ஓம் ரிஷி ஐயா போற்றி !!!

சடமாகிய நம் உடலை புறக்கருவிகளைக் கொண்டு அறிய முடியுமே தவிர சடத்தினுள் இருக்கும் சித்துப்பொருளை அறிய முடியாது. நம் உடலானது வெறும் சடம். அந்த சடத்தினுள் இருக்கும் சித்துப் பொருளை அறிய புறக்கருவிகள் உதவாது. அந்த சித்துப்பொருளை அறிய வேண்டுமாயின் குருவின் ஞான உபதேசத்தால் மட்டுமே அறிய முடியும்.

நம்முள் இருக்கும் சித்துப்பொருளை அறிய குரு அவசியம் தேவை. குரு இல்லாத வித்தை குருட்டு வித்தை. சிவத்தை சிவஞானத்தால் மட்டுமே அறிய முடியும். இந்த சிவ ஞானம் குருவின் உபதேசத்தால் மட்டுமே கிட்டும்.

குரு எனும் சொல் ஞானத்தையும், சீடன் எனும் சொல் ஞான உபதேசம் பெறும் தகுதியுடையோரையும் குறிக்கும். ஞானிகளோடு இணங்கி இருப்பவரே ஞானம் பெற்றவராவர். ஞான உபதேசம் பெற தகுதியுடையோரே சீடனாக முடியும். கீழ் மக்கள் ஞானிகளைப் பேண மாட்டார்கள், உணர மாட்டார்கள், உணரும் தகுதியைப் பெற்றிருக்க மாட்டார்கள். ஞானிகளுடைய மனம் வருந்தக் கூடிய வகையில் பேசுபவராக அவர்கள் இருப்பர். ஞானிகள் சூட்சுமமாய் உணர்த்தும் கருத்துக்களை அலட்சியப்படுத்தும் அறிவிலிகளாய் இருப்பர். குதர்க்கமாய் பேசி தனது செயலே சிறந்தது என மார்தட்டி பேசும் மடையர்களாய் இருப்பர்.

ஞானிகளோடு இணங்கி இருப்பவரேயன்றி வேறு யாரால் ஞானம் பெற முடியும். குருவைப் போற்றுவோரே ஞானிகளாவர். ஆகவே நாம் ஞானிகளாய் இருப்போம். குருவைப் போற்றுவோம்.

வாழ்வாங்கு வாழ்க, வாழும் வகையறிந்து வாழ்க!!!

Write a Reply or Comment

Your email address will not be published.