யோகமும் ஞானமும்

வாழ்வாங்கு வாழ்க!!!வாழும் வகையறிந்து வாழ்க!!!
ஓம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் போற்றி போற்றி போற்றி!!!
ஓம் ரிஷி ஐயா போற்றி!!!

யோகமும் ஞானமும்

யோகம் என்றால் தன்னை உணர்ந்து தன்னுள் உறையும் உயிரை உணர்ந்து ஒலியால் உடல் எனும் கனலையும் உயிராகிய அனலையும் இணைத்து நெருப்பு கூட்டி ஒளி ஏற்றுவதே யோகம்.
இது மட்டுமில்லாமல் குருவைத் தேடுவது, உடல் இயக்கம், உயிர் இயக்கம் பற்றி உணர்வது, தத்துவங்களை புரிந்து கொள்வது, தனித்திருத்தல், பசித் திருத்தல், விழித்திருத்தல், ஆசனங்கள், வாசியோகம், ராஜயோகம், குண்டலினி யோகம், பரியங்க யோகம், ஹடயோகம், அஷ்டாங்க யோகம் இவற்றைப் பற்றி பயிலுதலும், யோக சக்தியேயாகும்.

யோக சக்தியில் இறை சக்தியும் நாமும் நண்பர்கள் ஆவோம். ஞானம் நம்மை நாம் அறிந்து நம்மை மறந்து சும்மா இருந்து மெய்யறிவு பெறுவதே ஞானம் எனப்படும். நம்மை நாம் அறிந்து நம்மை மறந்து சும்மா இருந்து மெய் அறிவு பெறுவதே ஞானம். தியானம், மௌனம், அமைதி, ஆனந்தம், தயவு,கருணை, சாந்தம், பேரருள், நிதானம் இவை அனைத்துமே ஞானம் ஆகும். இதுவே ஞான சக்தியும் ஆகும். இதில் இறைசக்தி சற்குருவாகவும், நாம் சீடர்களாகவும் மாறுகின்றோம்.

தன்னையறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே

என்று கூறுகின்றார் திருமூலர்.

நம்மை நாம் உணர்ந்தால் பரம்பொருளை உணரலாம் .ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம். முக்திக்கான வழிகளாக நம் முன்னோர்கள்
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பாதைகளை வகுத்துள்ளார்கள்.

சரியையை பின்பற்றும்போது இறைசக்தி நமக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து வழிகாட்டுகிறது

கிரியையை பின்பற்றும்போது இறைசக்தி நம்மை ஆள்பவனாகி நம்மை அடிமைகளாகவும் மாற்றுகின்றது.

யோக சக்தியை பயன்படுத்தி உணரும்போது யோகத்தை பின்பற்றும்போது இறைசக்தி நமக்கு நண்பர்களாகின்றது.

ஞானத்தைப் பின்பற்றும் போது இறைசக்தியானது சற்குருவாகவும்,
நாம் சீடர்களாகவும் மாறுகின்றோம்.

சிந்திப்போம்!
செயற்படுவோம்!!!

Write a Reply or Comment

Your email address will not be published.