மூலமலம்

வாழ்வாங்கு வாழ்க !வாழும் வகையறிந்து வாழ்க! .
ஓம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் போற்றி!
ஓம் ரிஷி ஐயா போற்றி!

மூலமலம்

அகப்பற்று, புறப்பற்று என்று மனிதன் இருவகைப் பற்று களுடன் வாழ்கின்றான். நான் என்று உடலை நினைப்பது அகப்பற்று. எனது என்னுடையது என்று எண்ணுவது புறப்பற்று. அகங்காரம் மமகாரம் என்றும் இதனைக் கூறலாம். நான் என்கின்ற எண்ணம் மனிதனிடமிருந்து நீங்கும் பொழுது அவனுக்கு ஆனந்தம் உதிக்கும். மெய்ஞானம் வாய்க்கும்.

பஞ்சபூதங்களால் ஆன இந்த உடலை நான் என்கின்றோம். அலை ஒடுங்கிய கடல் இருப்பதுபோல நான் என்னும் எண்ணம் ஒடுங்கி விட்டால் பிரபஞ்சப் பேருணர்வு மட்டுமே அவனுக்கு மிஞ்சும். நான் என்னும் சொல்லில் அகங்காரம் இல்லை. அது எதார்த்தம். ஆனால் இந்த பிரபஞ்சத்துடன் நாம் வைக்கின்ற இணக்கத்தினால் தான் அகங்காரம் உண்டாகவும் மறையவும் செய்கின்றது. இப்பிரபஞ்சத்தில் காணும் அனைத்தும் இறையே என்று எண்ணி ஏற்றத்தாழ்வுகள் இன்றிப் பார்க்கும் பொழுது அகங்காரம் அடிபட்டும் மறைபட்டும் போய்விடுகின்றது. நம்முடைய உடல் மனதின் செயல்கள் அனைத்தும் நான் என்ற உணர்வின் வெளிப்பாடு தான். தியானம், தவம், யோகம் இவற்றின் குறிக்கோளே இந்த குறுகிய நாணை முழுமையான நானுக்குள் அதாவது பரம்பொருளுக்குள் கரைத்து விடுவதே ஆகும்.

நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும் நானென்று தான் என்று இரண்டில்லை என்பது நானென்ற ஞான முதல்வனே நல்கினான் நானென்று நானும் நினைப்பொழிந்தேனே
தானுமழிந்து தனமு மழிந்து நீடினுமழிந்து உயிரும் அழிந்துடன் வானுமழிந்து மனமும் அழிந்து பின் நானும் அழிந்தமை நான் அறியேனே’

கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பம் போல பரமாத்மாவின் பிரதிபலிப்பே ஜீவன். அந்த ஜீவனுக்குள் இருப்பது ஜீன். அந்த ஜீன்க்குள் இருப்பது அணு .அந்த அணுவிற்குள் சூட்சமமாக இருப்பதே பரமனு. பரமனுவை பார்க்கப் பழகுவோம். வாழ்வாங்கு வாழுவோம்!
வாழும் வகையறிந்து வாழ்வோம்! நன்றி வணக்கம்

Write a Reply or Comment

Your email address will not be published.