திருமூலர்
வாழ்வாங்கு வாழ்க, வாழும் வகையறிந்து வாழ்க.
ஓம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டரே போற்றி !!!
ரிஷி ஐயா போற்றி !!!
நம் உடலில் உள்ள உயிரின் மூலத்தை அறிந்தவர் திருமூலர். உயிரின் மூலத்தை அறிந்த திருமூலர் போகின்ற எட்டு, புகுகின்ற பதினெட்டு என ஒன்பது வாயில்கள் பற்றி பின்வருமாறு கூறுகின்றார். சுவை, ஒளி, ஊறு, ஓசை, வாசம், மனம், புத்தி, ஆணவம், அருவமாக உள்ள இந்த எட்டினை நாம் களைய வேண்டும், இவை போகின்ற எட்டு என்கின்றார்.
புகுகின்ற பதினெட்டு என்று பத்து வாயுக்களையும் எட்டு விகாரங்களையும் குறிப்பிடுகின்றார்.
பிராணன், அபாணன், உதாணன், வியானன், சமானன், நாகன் கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்ற பத்து வாயுக்களையும் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சர்யம் , துன்பம் எனும் எட்டு விகாரங்களையும் குறிப்பிடுகின்றார்.
இவற்றை புகுகின்ற பதினெட்டு என்கிறார்.
ஒன்பது வாயில்கள் பற்றி வலக்கண், இடக்கண் , வலது நாசி, இடது நாசி, வலது காது, இடது காது, வாய், குதம், பிறப்புறுப்பு என்று குறிப்பிடுகின்றார்.
இவைகளை நாம் முறையறிந்து தக்க குரு வழி மூலம் அகார, உகாரத்தினை அறிந்து நம் உயிரான மூலத்தை நம் உடலில் ஆராய வேண்டும் ஆராய்ந்து அறிய வேண்டும், தெளிய வேண்டும், புரிய வேண்டும், உணர வேண்டும்.
கிளிபோல் இனிமையாகப் பேச வேண்டும், கொக்கு போல் ஒரு மனதோடு தியானம் மேற்கொள்ள வேண்டும். நன்கு மென்று ஆடு போல் உணவருந்த வேண்டும். யானை போல் குளிக்க வேண்டும், நாயைப் போல் நன்றியுணர்வோடு இருக்க வேண்டும். காக்கை போல் குறிப்பறிந்து நடக்க வேண்டும்.
நம் உயிரான ஆதித்தனை வணங்க வேண்டும். ஆரோக்கியம் அனைத்தும் இனிமையாக நடந்திட இவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.
வாழ்வாங்கு வாழ்க! வாழும் வகையறிந்து வாழ்க!!!