ஞானம்

வாழ்வாங்கு வாழ்க!!! வாழும் வகையறிந்து வாழ்க!!!

ஓம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் போற்றி போற்றி போற்றி!!!

ஓம் ரிஷி ஐயா போற்றி!!!

ஞானம் –
தன்னை உணர்தலே ஞானம், தவமே ஞானத்தை தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். மக்களாகிய நாம் பிறவிப்பிணியால் சலிப்படைந்து, வெறுப்படைந்து வாழ்கின்றோம்.

இதிலிருந்து மீண்டு வருவதற்கு நாம் வழிகளைத் தேடுகின்றோம். பல இடங்களுக்கும் ஓடுகின்றோம்.

நம்முடைய வாழ்க்கை பாதையை செப்பணிடுவதற்காக உபாயங்களாக நம்முடைய ரிஷிகளும், சித்தர்களும், ஞானிகளும், யோகிகளும், மகான்களும் நான்கு வழிகளைக் காட்டுகின்றனர்.

பிறவா நிலைக்கு வழி கூறுகின்றனர். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம்.

இதில் சரியை என்பது பக்தியையும், கிரியை என்பது தொண்டு, யோகம் என்பது வாசி, ஞானம் என்பது தன்னைத்தானே உணர்தலையும் குறிக்கின்றது.

சரியை, கிரியை வெளிப்படையானது, யோகமும் ஞானமும் மறைபொருளானது.

திருஞானசம்பந்தர் சரியை மார்க்கத்தையும், திருநாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை பெற்றார்கள்.

இதில் பக்தி, தொண்டு, வாசி, தன்னைத் தான் உணர்தல் என்னும் நான்கில், நாம் ஏதாவது ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து காட்டினால் மற்ற மூன்றும் தானே தொடரும் என்கின்றனர்.

ஞானம் பற்றி ஒளவையாரும்,
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது, ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது, அதனினும் தானமும் தவமும் தான் செய்தல் அரிது, தானமும் தவமும் பெற்றவருக்கே, வானவர் நாடு வழி திறந்திடுமே என்கின்றார்.

தியானம் நம் தியானாலயத்தில் பயில விரும்புபவர்கள் இவற்றைப்பற்றி தெரிந்து கொள்வது மிகவும் நன்று. ஏனென்றால்
தவமே ஞானத்தை தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும்.

சிந்திப்போம், செயல்படுவோம்.

வாழ்வாங்கு வாழ்வோம்!!!

வாழும் வகையறிந்து வாழ்வோம்,

நன்றி வணக்கம். 🙏🙏🙏

Write a Reply or Comment

Your email address will not be published.