பக்தர்களின் வாழ்வில் மஹரிஷியின் மகிமை
நான் சேலம் மாவட்டம் அயோத்தியப் பட்டணத்தில் வசித்து வருகிறேன் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் உண்டு. ஈஸ்வரப்பட்டர் என் தோழி மூலம் ஓராண்டு காலத்திற்கு முன் எனக்குத் தெரியும். என் தோழி ஈஸ்வரபட்டரின் புகைப்படத்தையும், வழிபடும் முறையையும் எனக்கு கூறினாள். அன்றையிலிருந்து நானும் ஈஸ்வரமகரிஷியை வணங்கி வருகிறேன். அவர்களுடைய தியானாலய அமைப்பிற்கு உதவி செய்து வருகிறேன் மிகவும் அமைதியான சூழல் சுற்றிலும் மலைகள் அரணாக பார்க்கவும் மனம் ஒன்றிவிடுகிறது ஈஸ்வர மகரிஷியின் மேல்.
ஒரு நாள் என் மகள் பள்ளியில் இருந்து வரும்சமயம், வானம் இருட்டி கடும் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டிருந்தது. என் மகளுக்கு 5 வயதே ஆகிறது. என் தந்தை அவளை பள்ளியில் இருந்து அழைத்து வர இருசக்கரவாகனத்தில் சென்றுள்ளார் . மிகவும் பலத்த காற்று , இடி இடித்துக் கொண்டிருந்தது .அவ்வேளையில் என் மனம் மிகவும் பதைபதைத்தது .உடனே மகரிஷியின் புகைப்படம் அருகே சென்று என் மகள் வீடு வந்து சேரும் வரை மழை வரக்கூடாது என்று மனம் உருகி மகரிஷியை உருக்கமாக வேண்டினேன் .
நேரம் கடந்து கொண்டிருந்தது, வானம் இருட்டி அடுத்த நிமிடம் மழைபெய்யலாம் எனும் சூழலில் சுமார் 20 நிமிடங்கள் வரை மழை பெய்யவில்லை.
என் மகள் வருகையை எதிர்பார்த்து நான் வாசலிலேயே நின்று கொண்டிருந்தேன். என்ன ஆச்சர்யம்! நான் வேண்டியபடியே என் மகளை என் தந்தையார் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து வீட்டில் வாசற்படியில் ஏற மழை அடுத்தநொடி பலமாக மிகப்பலமாக ஒரு மணிநேரம் விடாமல் பெய்தது. உடனே நான் மகரிஷிக்கு நன்றி கூறினேன். அவரை மிகவும் வாழ்த்தி நன்றி கூறினேன் . ஈஸ்வர மகரிஷியின் அன்பு அளவு கடந்து எல்லையற்றது என்பதை உணர்ந்து கொண்டேன்
ஈஸ்வர மகரிஷிக்கு நன்றி !
கல்யாணதடைத் நீங்கியது
என் பெயர் ஜெகன் நான் தர்மபுரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்தவன். நான் ஒரு அரசு மருத்துவர் முப்பத்துஐந்து வயதாகிறது. எனக்கு திருமணத்தில் தடை ஏற்பட்டுக்கொண்டே வந்தது பல ஜோதிடர்களை சந்தித்த பொழுது குலதெய்வம் சென்று வணங்கிவாருங்கள் திருமணத்தடை நீங்கி விடும் என்று கூறினார்கள் குலதெய்வ வழிபாடு செய்து பல மாதங்கள் ஆகியும் திருமணம் ஆகவில்லை. என் வீட்டிற்கு அருகாமையில் உள்ள நண்பர் ஒருவர் மூலம் மகரிஷி ஈஸ்வரப்பட்டர் வாக்கை கோவையில் ஒருவர் கூறுவதாக சொன்னார். அதில் எனக்கு சிறிதும் நம்பிக்கையின்றி இருந்தேன். ஆதலால் நான் செல்லவில்லை. ஆனால் என் பெற்றோர் மட்டும் சென்றுவந்தனர்
அதன் பிறகு சில நாட்கள் கழித்து நானும் என் நண்பனும் தியானாலயம் அமைய இருக்கும் இடத்திற்குச் சென்றோம் அங்கு மகரிஷியின் சீடர்களைச் சந்தித்தோம். அவர்கள் அங்கே என்னிடம் பதினோறு எலுமிச்சைக்கனிகளைக் கொடுத்தனுப்பினர். அதனை இரண்டு துண்டாக்கி காலை பிரம்ம முகூர்த்தத்தில் விளக்குபோடச் சொன்னார்கள். அதன்படி செய்து வந்தேன், அவர் கூறியபடி இரண்டுவாரங்கள் கழித்து நல்லவரன் அமைந்தது . ஈஸ்வரப்பட்டர்க்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இன்றும் அவர்கட்கு சேவை செய்து வருகிறேன்.
அன்னதானம்
வியாழக்கிழமை (12/7/2018) அமாவாசையை முன்னிட்டு சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள சமர்த்தனம் மாற்றுத்திறனாளிகள் மையத்தில் இருக்கும் குழந்தைகட்கு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டதுடன் அவர்கள் உபயோகப்படுத்தும் விதமாக tooth brush,paste,washing soap, மற்றும் குளியல் soap போன்றவையும் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவை அனைத்திற்கும் உதவிய சென்னையைச்
சேர்ந்த திரு.சீனிவாசன்,திரு.பரத் குடும்பத்தாருக்கும், பேபி.நிகிதா அவர்கள் குடும்பத்தாருக்கும் நன்றியினை உரித்தாக்குகிறோம்
🙏🏻🙏🏻🙏🏻
இப்படிக்கு
மாமகரிஷி அறக்கட்டளை நிர்வாகிகள்.
குழந்தைப் பேறு
என்னுடைய பெயர் வானதி நான் கர்நாடகா மாநிலம் பெல்காமில் வசித்து வருகிறேன். எனக்குத் திருமணமாகி பத்து வருடங்களாக குழந்தைப் பாக்கியம் இல்லை பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் பல ஆலயங்களுக்குச் சென்றும் பரிகாரம் செய்தும் பலன் இல்லை. உறவினர்கள் மத்தியில் பல பிரச்சனைகளும் ஏற்ப்பட்டன. என் கணவருக்கு வேறொரு பெண்ணைப் பார்க்கவும் முயற்சி செய்தனர் .என்னுடன் பணியாற்றும் நண்பர் ஒருவர் மூலமாக கோயம்புத்தூர் சென்று தியானாலயம் அமையும் இடத்திற்குச் சென்று மகரிஷியின் சீடர்களை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி வந்தேன். அவர் கூறிய சில வழிமுறைகளை பின்பற்றினேன் ஆனால் மனதில்லாமல் விரக்தியோடு இருந்த சமயம் அவர்கள் சொற்படி செய்துபார்த்தால் என்னவென்று தோன்றியது. உடனே அவர் கூறியபடி குறிப்பிட்ட நட்சத்திரநாளில் இராமேஸ்வரம் சென்று கடல் நீரில் ஒருமணிநேரம் இருந்தேன். மகரிஷி அருளிய வாக்கின் படி மூன்று மாதம் கழித்து மருத்துவமனை சென்று பார்த்ததில் என் கர்ப்பம் உறுதியானது கேட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். என் வாழ்க்கையையும் மீட்டுக்கொடுத்து சமுதாயத்தில் நற்பெயரையும் பெற்றுக்கொடுத்த மாமகரிஷி ஈஸ்வரப்பட்டருக்கு என் வாழ்வைக் காணிக்கையாக்கி இன்றும் அவர் இறைபணியில் பயணிக்கிறேன்.
குரு
வாழ்வாங்கு வாழ்க, வாழும் வகையறிந்து வாழ்க.
ஓம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டரே போற்றி !!!
ஓம் ரிஷி ஐயா போற்றி !!!
சடமாகிய நம் உடலை புறக்கருவிகளைக் கொண்டு அறிய முடியுமே தவிர சடத்தினுள் இருக்கும் சித்துப்பொருளை அறிய முடியாது. நம் உடலானது வெறும் சடம். அந்த சடத்தினுள் இருக்கும் சித்துப் பொருளை அறிய புறக்கருவிகள் உதவாது. அந்த சித்துப்பொருளை அறிய வேண்டுமாயின் குருவின் ஞான உபதேசத்தால் மட்டுமே அறிய முடியும்.
நம்முள் இருக்கும் சித்துப்பொருளை அறிய குரு அவசியம் தேவை. குரு இல்லாத வித்தை குருட்டு வித்தை. சிவத்தை சிவஞானத்தால் மட்டுமே அறிய முடியும். இந்த சிவ ஞானம் குருவின் உபதேசத்தால் மட்டுமே கிட்டும்.
திருமூலர்
ஓம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டரே போற்றி !!!
ரிஷி ஐயா போற்றி !!!
நம் உடலில் உள்ள உயிரின் மூலத்தை அறிந்தவர் திருமூலர். உயிரின் மூலத்தை அறிந்த திருமூலர் போகின்ற எட்டு, புகுகின்ற பதினெட்டு என ஒன்பது வாயில்கள் பற்றி பின்வருமாறு கூறுகின்றார். சுவை, ஒளி, ஊறு, ஓசை, வாசம், மனம், புத்தி, ஆணவம், அருவமாக உள்ள இந்த எட்டினை நாம் களைய வேண்டும், இவை போகின்ற எட்டு என்கின்றார்.
புகுகின்ற பதினெட்டு என்று பத்து வாயுக்களையும் எட்டு விகாரங்களையும் குறிப்பிடுகின்றார்.
பிராணன், அபாணன், உதாணன், வியானன், சமானன், நாகன் கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்ற பத்து வாயுக்களையும் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சர்யம் , துன்பம் எனும் எட்டு விகாரங்களையும் குறிப்பிடுகின்றார்.
இவற்றை புகுகின்ற பதினெட்டு என்கிறார்.ஒன்பது வாயில்கள் பற்றி வலக்கண், இடக்கண் , வலது நாசி, இடது நாசி, வலது காது, இடது காது, வாய், குதம், பிறப்புறுப்பு என்று குறிப்பிடுகின்றார்