சரியை,கிரியை

சரியை கிரியை
==============
வாழ்வாங்கு வாழ்க!!! வாழும் வகையறிந்து வாழ்க!!!

ஓம் மாகரிஷி ஈஸ்வரப்பட்டர் போற்றி போற்றி போற்றி!!!

ஓம் ரிஷி ஐயா போற்றி!!!

சரியை கிரியை –

முக்திக்கான வழிகளாக சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் வழிகளை நம்முடைய முன்னோர்களும், ஞானிகளும் வகுத்து ள்ளார்கள்.

இவற்றில் சரியையும், கிரியையும் வெளிப்படையானது, அனைவரும் புரிந்து கொள்ளத்தக்கது, உணரக்கூடியது.
யோகமும் ஞானமும் மறை பொருளானது.

சரியை என்றால் எந்த நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது.
சதா சர்வகாலமும் இறைவனை வழிபட்டுக் கொண்டே இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகள் செய்வது.
புராண இதிகாசங்களைப் படிப்பது அல்லது கேட்பது, மந்திரங்கள் ஓதுவது, ஜெபம் செய்வது, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது, பக்தி ஒழுக்கம், நன்னடத்தை, நல்ல குணம், நல்ல பண்பு இவையெல்லாம் சரியைகளாகும்.

இதுவே இச்சையால் வரும் இச்சா சக்தியும் ஆகும்.
இதில் இறை சக்தியே தாயும் தந்தையும் ஆவார்கள். இந்த சரியையை பின்பற்றும் நாம் அவர்களுக்கு புத்திரர்கள் ஆவோம்.

கிரியை என்றால் ஆலய உளவாரப்பணிகள், அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்வது, அடியார்களுக்கு தொண்டு செய்வது, அனைத்து உயிர்களையும் சமமாக எண்ணுவது, அன்னதானங்கள் செய்வது, யாகங்கள் செய்வது, பணிவு, தியாகம் இவை அனைத்தும் கிரியைகள் ஆகும். இதுவே கிரியா சக்தியும் ஆகும்.

கிரியா சக்தியில் இறைசக்தி ஆண்டான் ஆகின்றான், ஆள்பவன் ஆகின்றான்.
இங்கு சாதகர்கள் அடிமை ஆகின்றனர்.

சரியையைப் பின்பற்றுபவர்கள் இறை சக்திக்குப் புத்திரர்களாகவும், கிரியையைப் பின்பற்றுபவர்கள் இறை சக்திக்கு சாதகர்களாகவும், அடிமையாகவும் ஆகின்றனர்.

நன்றி,
வணக்கம் 🙏🙏🙏.

Write a Reply or Comment

Your email address will not be published.