அன்பு

வாழ்வாங்கு வாழ்க!வாழும் வகையறிந்து வாழ்க !
ஓம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் போற்றி! போற்றி! போற்றி!
ஓம் ரிஷி ஐயா போற்றி !
அன்பு

அன்பு என்பது நம்மிடமிருந்தும் நாம் அறியாமல் இருக்கின்றோம். அன்பின் முதல் எண்ண அலையை நாம் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும்.

அன்பு பெறுபவனைக் காட்டிலும் கொடுப்பவர்களுக்கே அதிக மகிழ்வினைத் தரும்.

அன்பு நம்மிடமிருந்தும் நாம் அறியாமல் இருப்பதினால் காலம் எனும் பாதையில் அன்பின் காலடிச் சுவடுகள் அழிந்து காணப்படுகின்றது. அன்பு மிகவும் பலம் வாய்ந்த எதிரியையும் வெற்றி கொள்ள வல்ல சிறந்த ஆயுதம்.

அன்பு ஒன்று மட்டுமே அனைத்து நாடுகளிலும் செல்லுபடியாகும் நாணயம் ஆகும்.

அன்பை ஒழித்து வைக்காமல் நம் செயல்கள் மூலம் அதை ஒளிரச் செய்ய வேண்டும். மிளிரச் செய்ய வேண்டும்.
பிறரிடத்தில் அதை மலரச்செய்ய வேண்டும்.

நாம் அன்புமயமாக மாறும் பொழுது நம் அனைத்து புலன்களும் அன்பின் பாலங்களாக மாறுகின்றன. நம் வாழ்வின் அனைத்து வெற்றிகட்கும் சரியான அளவுகோல் அன்பு ஒன்று மட்டுமே.

அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக இருப்பது தான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும். மனம் நிறைந்த அன்பு மட்டுமே நல்ல பலனைத் தரும். அக அன்போடு செய்யும் எந்த செயலும் மன மகிழ்வினைத் தரும். இது ஞானிகளின் அனுபவ வார்த்தைகளாகும். வாழ்வாங்கு வாழ்வோம்!
வாழும் வகையறிந்து வாழ்வோம்!
நன்றி வணக்கம்.

 

Write a Reply or Comment

Your email address will not be published.