அகண்டம்

வாழ்வாங்கு வாழ்க!!! வாழும் வகையறிந்து வாழ்க!!!
ஓம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் போற்றி!போற்றி! போற்றி!
ஓம் ரிஷி ஐயா போற்றி!!!

அகண்டம்

மலை மலையாய் சுற்றிச் சுற்றி மாண்டவர் கோடி மறை நூல்கள் கற்றறிந்து மாண்டவர் கோடி!
கலை பலவும் கற்றறிந்து மாண்டவர் கோடி!
கரை சேர வழிதேடி மாண்டவர் கோடி!சிலைகளெல்லாம் சுற்றி வந்து மாண்டவர் கோடி!
சிறையைப் போல் குகையிருந்து மாண்டவர் கோடி!அலை போலமனம் மாயை தன்னிலே அலைந்து அலைந்து மாண்டவர்கள் கோடி! நிலை பெறாத யோகத்தில் மாண்டவர்கள் கோடி! நின்று கொண்டே தவமிருந்து மாண்டவர்கள் கோடி!உலையா சன்னியாசத்தில் மாண்டவர்கள் கோடி!
ஒன்றிநின்ற சம்சாரத்தில் மாண்டவர்கள் கோடி! மன்றாடி பூஜை செய்தும் மாண்டவர்கள் கோடி! வலைபோல பின்னி நிற்கும் வாசியை தானே வழிநடத்த அறியாமல் மாண்டவர்கள் கோடான கோடி!!!

வலை போல பின்னி நிற்கும் வாசியை தானே வழிநடத்த அறியாமல் மாண்டவர்கள் கோடான கோடி!!!

இதில் நாம் எதனை அறிந்து கொண்டு மாண்டு போக விரும்புகின்றோம் என்று நாம் நம் உள்மனதினை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.நம் உள்ளே நாம் கேள்விகள் கேட்க வேண்டும். ஓரணு உயிரியாகத் தோன்றி பல பல பிறவிகள் பெற்று பல படிநிலைகள் கடந்து மனிதனாக பிறக்கின்றோம். மனிதப் பிறவி பெற்றவர்களுக்கே சிந்திக்கும் ஆற்றல் உண்டு. நம் சிந்தனையை பிறவிப் பிணி நீக்கும் உபாயம் அறிய பயன்படுத்த வேண்டும்.

யார் ஒருவன் அணு விலிருந்து மனித பிண்டமாக வெளிப்பட்டு இந்த அண்டத்தை அறிகின்றானோ அவனே அண்டமும் பிண்டமும் அற்ற அகண்டம் நான் என்பதை அறிகின்றான்.

சிந்திப்போம்!!! வாழ்வாங்கு வாழ்வோம்!! வாழும் வகையறிந்து வாழ்வோம்!!!

நன்றி வணக்கம்🙏🙏🙏

Write a Reply or Comment

Your email address will not be published.