ஓம் ஈஸ்வரா குருதேவா
மனிதன் மற்றவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டியிருக்கிறது. மனம் அடிக்கடி சிதறுவதால் தீய உணர்வுகள் சந்தர்ப்ப வசத்தால் ஆட்கொள்கின்றன. அதனால் மனிதன் மற்றவர்களுடன் சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வாழ்க்கையை வாழத் தவறவிடுகிறான். திடீரென்று சிலரை வெறுத்தலும், விரும்புவதும் ஆகிய செயல்கள் நடைபெறுகின்றன. இன்பம் வந்ததும் கூடவே இறுமாப்பும் வந்துவிடுகின்றது. துன்பம் ஏற்படின் துவண்டு போதலும் ஏற்படுகின்றது. இந்த இரு வகையான மனநிலைகளை மாற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றான். மனித வாழ்வு ஆன்மிக வாழ்க்கைக்கு ஓர் ஒப்பற்ற சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பத்தை நம் ஆன்மவிடுதலைக்கு வழியை இத்தியானாலயம் எடுத்து.
அத்வைதம், துவைதம், வஷிஷ்டாத்வைதம் ஞானத்தின் பீடமான ஈஸ்வரமகரிசி தவ சிரேஷ்டர்களுக்கு அருளாசி அருளியவர், சற்குரு இரசமணி சித்தர், ஈஸ்வரப்பட்டருடைய மகிமையை எளியேன் அறிந்துள்ளேன். என் இளம் பிராயத்திலிருந்தே. இங்ஙனம் இத்தியானாலயத்தில் தன்னலமற்ற தயை அன்பும், பகுத்தறிவிற்கு பொருத்தமான மெய்ஞான மொழிகளும் என்னைக் காந்தம் போல் கவர்ந்து இழுத்தன.
YouTube Videos
மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர்.
https://www.youtube.com/c/MamaharishiEswarapattar
Follow us:
Facebook:
https://www.facebook.com/eswarapatta
Twitter: https://twitter.com/MamaharishiE
Website: https://eswarapattar.com
Mamaharishi Eswarapattar Trust
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை
Contact: 9384745035, 9384745038, 9677001245, 9176268892
குரு
ஓம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டரே போற்றி !!!
ஓம் ரிஷி ஐயா போற்றி !!!
சடமாகிய நம் உடலை புறக்கருவிகளைக் கொண்டு அறிய முடியுமே தவிர சடத்தினுள் இருக்கும் சித்துப்பொருளை அறிய முடியாது. நம் உடலானது வெறும் சடம். அந்த சடத்தினுள் இருக்கும் சித்துப் பொருளை அறிய புறக்கருவிகள் உதவாது. அந்த சித்துப்பொருளை அறிய வேண்டுமாயின் குருவின் ஞான உபதேசத்தால் மட்டுமே அறிய முடியும்.
திருமூலர்
நம் உடலில் உள்ள உயிரின் மூலத்தை அறிந்தவர் திருமூலர். உயிரின் மூலத்தை அறிந்த திருமூலர் போகின்ற எட்டு, புகுகின்ற பதினெட்டு என ஒன்பது வாயில்கள் பற்றி பின்வருமாறு கூறுகின்றார். சுவை, ஒளி, ஊறு, ஓசை, வாசம், மனம், புத்தி, ஆணவம், அருவமாக உள்ள இந்த எட்டினை நாம் களைய வேண்டும், இவை போகின்ற எட்டு என்கின்றார்.
புகுகின்ற பதினெட்டு என்று பத்து வாயுக்களையும் எட்டு விகாரங்களையும் குறிப்பிடுகின்றார்.
மாத இதழில்
“பாபாஜி சித்தர் ஆன்மீகம்” என்ற மாத இதழில் தொடராக திருமதி. பாரதிரவிச்சந்திரன்.